top of page

வாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களுக்கு அத்தீர்மானத்தினால் என்ன?


வாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களுக்கு அத்தீர்மானத்தினால் என்ன? வாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களுக்கு அத்தீர்மானத்தினால் என்ன? எப்படி தேவனுடன் என்னுடைய பிரயாணத்தை தொடங்குவது? என்ற கேள்விகள் ஒருவேளை எழலாம் (அ) எழும்பலாம் உங்களுடைய பிரயாணத்திலே கேள்விகள் வரும்போதெல்லாம் வேதத்தின் அடிப்படையில் கீழே ஐந்து படிகளாக விவரிக்கப்பட்டுள்ளவை உங்களை நடத்தி செல்லும்: 1. இரட்சிப்பை அறிந்துகொண்ட நிச்சயம். Iயோ. 5:3, "உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்" இரட்சிப்பை நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்றும், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்கின்ற நம்பிக்கையின் உறுதி, நம்மில் காணப்படவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இரட்சிப்பை விளக்ககூடிய முக்கியமான குறிப்புகளை சுருக்கமாக பார்ப்போம். a) தேவன் அருவருக்கின்ற காரியங்களையெல்லாம் நாம் செய்திருக்கின்றோம் (ரோ. 3:23) b) நம்முடைய பாவத்தினால்,தேவனை விட்டு நித்தியக்காலம் பிரியவேண்டிய தண்டனை உண்டானது. c) நம்முடைய பாவத்திற்கு சிலுவையில் கிறிஸ்து தண்டனை ஏற்றார் (ரோ.5:8) d) II கொரி. 5:21) நம்முடைய இடத்திலே, நம் நிமித்தம் அவர் தண்டனை அனுபவித்தார். கிறிஸ்துவின் மரணம் நம்முடைய பாவத்தில் இருந்து நம்மை மீட்க போதுமானது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நிருபிக்கிறது. என்னுடைய பாவத்திற்கு பரிகாரமாய் கிறிஸ்து மரித்தார், என்று நம்பி அவர்மேல் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, தேவன் அவர்களை மன்னித்து இரட்சிப்பை அளிக்கிறார்(யோ. 3:16, ரோ. 5:8- 11) இதுவே இரட்சிப்பின் செய்தி. இயேசு கிறிஸ்துவே உங்கள் வாழ்வின் இரட்சகர் என்கிற விசுவாசம் உங்களில் காணப்படும் போது நீங்கள் இரட்சிப்பை அடைவீர்கள். தேவன் உங்கள் பாவங்களை மன்னித்து நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். (ரோ. 8:38-39; மத். 28:20) மறவாதே, உன்னுடைய இரட்சிப்பு இயேசு கிறிஸ்த்துவுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளது (யோ. 10:28-29). இயேசு கிறிஸ்து மாத்திரம் உன் இரட்சகர் என்று அவர் மீது நம்பிக்கைவைப்பாயானால், நீ நிச்சயமாய் உன் நித்தியத்தை பரலோகத்தில் தேவனோடு கழிக்கலாம். 2. வேதத்தை உபதேசிக்கின்ற ஒரு நல்ல சபையை கண்டுபிடி சபையை ஒரு கட்டிடமாக நினைக்க வேண்டாம். விசுவாசி தான் சபை இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளுதல் (அ) அவசியமானதும் திருச்சபை அடிப்படை குறிக்கோளின் ஒன்றுமாக இருக்கிறது உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவின் மேல் வைத்து உங்கள் பகுதியில் வேதத்தை விசுவாசித்து அதன் சத்தியத்தை போதிக்கின்ற சபையை கண்டுப்பிடித்து அதின் போதகரோடு பேசுங்கள். நீங்கள் கிறிஸ்துவில் வைத்து இருக்கிற புதிய விசுவாசத்தை போதகரும் அறிந்து கொள்ளட்டும். திருச்சபையின் இரண்டாம் குறிக்கோள் வேதத்தை உபதேசிப்பதே. தேவனின் கட்டளைகளை உங்கள் வாழ்க்கையில் எப்படி அப்பியாசப்படுத்துகிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள இது வழிவகுக்கிறது வேதத்தை புரிந்துகொண்டு வாழ்ந்தால் நீங்கள் வெற்றியுள்ள. வல்லமையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழலாம். II திமோ. 3:16-17 சொல்கிறது "வேதவாக்கியங்கலெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது அவைகள். உபதேசத்திற்க்கும். சீர்திருத்தத்திற்கும். நீதியை படிப்பித்தலுக்கு பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது." திருச்சபையின் மூன்றாம் குறிக்கோள் ஆராதிப்பது. ஆராதிப்பது என்பது தேவன் நமக்கு செய்த எல்லா காரியங்களுக்கும் நன்றி செலுத்துவதாகும் தேவன் நம்மை இரட்சித்தார். நம்மை நேசிக்கிறார். நம் தேவைகளை சந்திக்கிறார். நமக்கு வழிகாட்டி நடத்துகிறார் நாம் அவருக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது எப்படி? தேவன் பரிசுத்தர். நீதியுள்ளவர், அன்பானவர், இரக்கம் உள்ளவர். கிருபை நிறைந்தவர், வெளிப்படுத்தல் 4:11 "கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுகொள்கிறதற்குப் பாத்திராராயிருக்கிறீர் என்று அறிவிக்கிறது. 3. தேவனுக்கென்று தினமும் நேரத்தை ஒதுக்குதல் தேவனோடு தினமும் நேரத்தை செலவிடுவது முக்கியமானதாகும் சிலர், அந்த நேரத்தை "அமைதிநேரம்" என்று வேறு சிலர் அதை "தியானநேரம்" என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் நம்மை தேவனோடு சமர்ப்பிக்கிற நேரமாய் அது இருக்கிறது சிலர் காலையிலும் சிலர் மாலையிலும் நேரத்தை ஒதுக்குகின்றனர் எந்த நேரத்தில் அல்லது எப்பொழுது கூடுவது அந்த நேரத்தை எப்படி அழைப்பது அதுவல்ல முக்கியம். தேவனோடு நாம் தினமும் நேரத்தை செலவழிப்பதால் என்ன? எந்த நிகழ்ச்சி நம்மை தேவனுக்கென்று நேரத்தை ஒதுக்க வைத்தது? ய) ஜெபம்: நேரத்தை ஆண்டவரோடு பேசுவதும் ஆண்டவரோடு உங்கள் கஷ்டங்களையும். கவலைகளையும் சொல்வதும் ஞானத்தை கேட்பதும் அவருடைய வழிநடத்துதலை கேட்பதும். உன் தேவைகளை சந்திக்கும்படி கேட்பதும். நீ தேவனை எவ்வளவாய் நேசிக்கிறாய் என்று சொல்வதும் உன் வாழ்வில் செய்த எல்லா உபகாரங்களுக்காய் அவரை போற்றி புகழ்வது இவைகளே ஜெபம். டி) வேதம் வாசிப்பது: சபையில் ஓய்வுநாள் பாடைசாலையில் வேத ஆராச்சி கூட்டம் ஆகிய இடங்களில் வேதம் போதிக்கப்பட்டுவருகிறது. ஆனாலும் உங்களுக்கு நீங்களே வேதம் வாசிக்க வேண்டும். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எப்படி நல்ல தீர்மானங்கள் எடுக்க கிறிஸ்துவின் வழிநடத்துதல், தேவசித்தத்தை அறிவது எப்படி பிறருக்கு எப்படி ஊழியம் செய்வது ஆவிக்குரிய வாழ்வில் வளருவது எப்படி போன்ற அநேக காரியங்களுக்கு விளக்கங்கள் அடங்கிய வேதம் நமக்கு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. நாம் நம்முடைய வாழ்க்கையின் மூலமாய் தேவனை எப்படி பிரியப்படுத்துவது. நாம் அதின் மூலம் திருப்தி அடைவது எப்படி என்பதை போதிக்கின்ற தேவனுடைய ஆலோசனைகள் அடங்கிய முக்கிய கையேடு வேதாகமம். 4. ஆவிக்குரிய காரியத்தில் உங்களுக்கு உதவுபவருடன் ஐக்கியத்தை மேம்படுத்த வேண்டும்: I கொரி. 15:33 சொல்கிறது "மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" பாவ வாழ்க்கை வாழ்கிறவர்களோடு நாம் ஐக்கியம் வைப்போம் என்றால் நம்முடைய வாழ்க்கை அதேபோல் மாறிப்போகும். நாம் சூழலில் இருக்கிறோமோ அந்த சூழல் நம்மை மாற்றிவிடும் ஆகவே தேவனை நேசித்து, தேவனுக்கு ஒப்புகொடுத்து வாழ்கின்ற கர்த்தரின் மக்களின் மத்தியில் வாழ்வது நமக்கு அவசியமாய் இருக்கிறது. தேவனோடு உறவாடுகின்ற, நேரத்தை செலவு செய்கின்ற நண்பர்களை தெரிந்துகொள் (எபி. 10:24,25) நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தி சொல்கிறவர்களாயும், பாவத்திலே கடினபடாதபடி ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய காரியத்தில் தேறினவர்களாயிருங்கள் வசனத்தினால் தேற்றுகிறவர்களாயும் இருங்கள். 5. ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும் அநேகருக்கு ஞானஸ்நானத்தை குறித்து தவறான சிந்தைகள் உண்டு. "ஞானஸ்நானம்" என்ற வார்த்தைக்கு "தண்ணீரில் மூழ்குதல்" என்று அர்;த்தம். ஞானஸ்நானம் என்பது நீ கிறிஸ்துவுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து அவரை பின்பற்றுகிறாய் என்பதை வெளிப்படையாய் அறிக்கை செய்தல். "தண்ணீரில் மூழ்கப்படுதல்" என்பது ஒப்புக்கொடுத்து அவரை பின்பற்றுகிறாய் என்பதை வெளிப்படையாய் அறிக்கை செய்தல். "தண்ணீரில் மூழ்கப்படுதல்" தேவனோடு நாம் அடக்கம் பண்ணப்படுகிறோம் என்பதையும் "தண்ணீரில் இருந்து எழும்புதல்" தேவனுடைய உயிர்த்தெழுதலை நமக்கு காண்பிக்கிறது ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மரணம். அடக்கம், உயிர்த்தெழுதல் என்பவைகளை நம்மை கண்டுகொள்ள செய்கிறது (ரோ. 6:3-4) ஞானஸ்நானம் உங்களை இரட்சிக்காது உங்கள் பாவங்களை கழுவாது ஞானஸ்நானம் என்பது கீழ்படிதலின் ஒருபடியும் கிறிஸ்து ஒருவரே இரட்சிப்புக்கு வழி என்று வெளிப்படையாய் பறைசாற்றுதலும் ஆகும்.

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
ABOUT US

Church “Yesu En Nesar” is a large and friendly family where people with various backgrounds, religious experiences, and different characters are united by the love of Christ, shared future, and desire to live a true Christian life.

ADDRESS

Telephone: +(91)-413-2222707

Email: mail@yesuennesar.org

102' Kandappa Mudaliar Street, Puducherry, PY - 605001. INDIA.

Click here to - Get Directions -

SUBSCRIBE FOR EMAILS
  • Grey Facebook Icon
  • Grey Google+ Icon
  • Grey Twitter Icon
  • Grey Instagram Icon
© Copyright

©2018 YESU EN NESAR CHURCH. ALL RIGHTS RESERVED.

bottom of page