கிறிஸ்தவம் என்றால் என்ன?
இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது. "கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது. திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).