top of page

இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன?


நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா? சரீரபிரகாரம் பசி அல்ல. உன் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தை குறித்தான ஆவல்? உனக்குள் உன்னை திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா? அப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "ஜீவ அப்பம் நானே என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோ. 6:35). குழப்பமா? வாழ்க்கையின் பாதை தெரியவில்லையா? யாரோ ஒருவர் உன் வாழ்க்கையின் ஒளியை அனைத்துவிட்டது போல் இருக்கின்றதா? ஆப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிளே நடவாமல் ஜீவ ஒளியைப் அடைந்திருப்பான் என்றார்"(யோ.8:12). உன் வாழ்கையில் கதவுகள் அடைபட்டுபோனதா? அனேக வழிகளை நீ முயற்சித்தும் அவைகள் வெறுமையும் அர்த்தமற்றதாய் இருக்கிறதா? உன் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்றிருக்கிறாயா? ஆப்படியானால் இயேசுவே வழி! "நானே வாசல், என் வழியாய் உட்பிரவேசித்தால் மேய்ச்சலை கண்டடைவான்" (யோ. 10:9). என்று இயேசு சொல்கிறார். மற்றவர்கள் எப்பொழுதும் உங்களை வெறுக்கிறார்களா? உன்னுடைய உறவில் ஆழமில்லையா? உறவு வெறுமையாய் தோன்றுகிறதா? யாராவது உன்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்களா? அப்படியானால் வழி இயேசுவை! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன். என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா? அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன் என்று சந்தேகப்படுகின்றாயா? நீ மரித்த பின்பு வாழ விரும்புகிறாயா? அப்படியானால் வழி இயேசுவே! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனை கொடுக்கிறான்" (யோ. 10: 11,14). இந்த வாழ்க்கைக்கு பின் என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுசாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோ. 11:25-26, பிர. 7:20, ரோ. 3:23) நம்முடைய பாவத்தினாலே நாம் தேவனை விட்டு பிரிக்கப்பட்டோம் தேவனோடு ஐக்கியம் விட்டு போனது (யோ. 3:36). உன்னுடைய வாழ்க்கையில் குழப்பங்கள் மாற உன்னுடைய பாவத்தை சுமந்து தீர்த்த கிறிஸ்துவிடம் வா (II கொரி. 5:21) நீ இரட்சிப்படைய வேண்டும் என்பதே அவர் திட்டம் அவர் விருப்பமும் கூட. அவர் ஒருவரால் மாத்திரம் உன் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முடியும் அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி அவரை நோக்கி பார்! இரட்சிப்பார்! இரட்சிப்படைவாய்.

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page