top of page

இயேசு கிறிஸ்து யார்?


இயேசு கிறிஸ்து யார்? கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு மாறாக ஒரு சிலரே இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கருத்தாகும். இதைக் குறித்த விவாதம் இயேசு கிறிஸ்துவின் முழு அடையாளங்களைக் குறித்து பேசப்பட்டபொழுது தான் துவங்கியது. எல்லா பெரிய மதங்கள் என்று அழைக்கப்படுகிறவைகளுமே இயேசு கிறிஸ்து பெரிய தீர்க்கதரிசி என்றோ அல்லது ஒரு நல்ல போதகர் என்றோ அல்லது ஒரு தேவ மனிதன் என்றோ போதிக்கின்றன. ஆனால் பரிசுத்த வேதாகமம் அவரை தீர்க்கதரிசியிலும் பெரியவர் என்றும். அவரே நல்ல போதகர் என்றும் அல்லது தேவ குமாரன் என்றும் கூறுகிறது. சி.எஸ்.லூயிஸ், மியர் கிறிஸ்டியானிட்டி (பெறும் கிறிஸ்துவம்) என்ற தமது புஸ்தகத்தில் இப்படியாக எழுதுகிறார். இதன் மூலமாக எந்த ஒருவரும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவே விரும்புகிறேன் அதாவது இயேசு கிறிஸ்துவை ஒரு நல்ல சன்மார்க்க போதகராக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் அவர் தெய்வம் என்று அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்ற இந்தக் கருத்து மிகவும் முட்டாள் தனமானது. இதை நாம் அப்படிக்கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. வெறும் மனிதனாக இருக்கும் ஒரு மனிதன். ஓரு மிகப் பெரிய சன்மார்க்க போதகர் சொல்லக் கூடிய கருத்துக்களைப் போல, இயேசு கிறிஸ்து சொன்னதோடு ஒப்பிட முடியாது. அப்படி இயேசு கிறிஸ்துவை ஒப்பிடுகிறவன் புத்தியில்லாத பைத்தியம் பிடித்தவனாக இருக்க வேண்டும் அல்லது அழுகிப்போன முட்டைக்கு சமானமாயிருக்கிற ஒரு மனிதனாக இருக்க வேண்டும் அல்லது நரகத்திற்கு சொந்தக் காராணாயிருக்கிற சாத்தானாக இருக்க வேண்டும். மேற்சொன்ன கருத்தை உடையவர்கள் ஏதாவதொன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஒன்று மனிதனாக இருந்தவரும் இருக்கிறவருமான தேவகுமாரன் அல்லது பைத்தியம் பிடித்த மனிதன், அதைக் காட்டிலும் கீழான மனநிலையிலிருக்கிறவன். அவன் முட்டாளாயிருக்கிற படியினால் அவனை அடைத்து வைக்கலாம். அவனைக் காரி உமிழலாம். சாத்தான் என்று எண்ணி அவரைக் கொல்லளாம். மாறாக அவனைக் கடவுள் என்று சொல்லி அவனது காலில் விழலாம். ஆகவே இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான முட்டாள் தனத்தை உடைய ஒருவரை ஒரு சிறந்த மனித போதகராக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது நல்லது. ஆனால் இவற்றைச் செய்வதற்குரிய வாய்ப்பை. அவர் நம்மிடத்தில் விட்டு விடுவதில்லை. இப்படிச் செய்ய வேண்டுமென்றும் அவர் விரும்பவில்லை. அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று சொன்னார்? பரிசுத்த வேதாகம் அவரைக் குறித்து யாரென்று சொல்கிறது. முதலாவதாக இயேசு கிறிஸ்து (யோ10:3)ல் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். பார்ப்பதற்கு தன்னைக் கடவுளென்று, அவர் சொன்னதாக இவ்வசனத்தில் தெரியவில்லை. அப்படியிருந்தும், அந்த வாக்கியத்துக்கு; யூதர்களின் பிரதிபலிப்பைப் பாரங்கள். 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்".(யோ10:33) இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்து தன்னை தேவனைன்று குறிப்பிட்டதாக சொல்லுகிறது. யூதர்கள் இயேசு கிறிஸ்து தன்னை கடவுளென்று குறிப்பிட்டதை புரிந்து கொண்டார்கள். இதற்கு இயேசு கிறிஸ்து, மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை (யோ8:58) ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்'என்றார்". அப்பொழுது அவர் மேல் கல்லெறியம்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள். (யோ8:59) இயேசு தன்னைக் குறித்து குறிப்பிடும் பொழுது, 'நான்" என்று குறிப்பிடுவதை பார்க்கலாம். அது பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னைக் குறித்து தமது நாமத்தை வெளிப்படுத்தியதிற்கு ஒப்பாயிருக்கிறது.(யாத்3:14) இயேசு கிறிஸ்து கடவுள் என்று சொல்லாவிட்டால், யூதர்கள் அவன் மேல் கல்லெறியும் படி ஏன் கற்களை எடுத்துக் கொண்டார்கள். (யோ1:1) அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று சொல்லுகிறது. (யோ1:16) அந்த வார்த்தை மாம்சமானார் என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்த கடவுள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா என் ஆண்டவரே, என் தேவனே என்று அழைக்கிறார். (யோ20:28) இயேசுகிறிஸ்து அதைத் திருத்தவில்லை. பரிசுத்த பவுல் அப்போஸ்தலர் இயேசுகிறிஸ்துவைக் குறித்து மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து (தீத்து2:13)ல் குறிப்பிடுகிறார். பரிசுத்த பேதுரு அப்போஸ்தலனும் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவென்று (2பேதுரு1:1) குறிப்பிடுகிறார். புpதாவாகிய தேவனும், தமது குமாரனுடைய அடையாளத்திற்கு சாட்சி பகருகிறார். தம்முடைய முழு அடையாளத்தைக் குறித்து சாட்சியாக 'ஒ தேவனே உம்முடைய சிங்காசனம் (சங்45:6) தேவனே உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஐ;யத்தின் செங்கோல் தகுதியுள்ள செங்கோலாயிருக்கிறது என்று சொல்கிறார். பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்கள். கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துகிறது. நமக்கொரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமானவர் ஆலொசனைக் கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும் (ஏசா9:6). ஆகவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நல்ல போதகர் என்று விசுவாசிக்கிறேன் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல என்று ஊ.ளு.லூயில் வாதிடுகிறார். இயேசுகிறிஸ்து தெளிவாக தன்னை மறுக்க முடியாத அளவில் தன்னைக் கடவுளென்று அறிக்கையிடுகிறார். அவர் தேவனாக இல்லாமலிருப்பாரானால் அவர் பொய்யர் ஆகவே, அவர் தீர்க்கதரிசியிலும், போதகரிலும் இருந்து வேறுபடுகிறார். நவீன பண்டிதர்கள். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையை அபத்தமாக்கும்படியாக. உண்மையான வரலாற்று நாயகனான இயேசு சொன்னதாக வேதாகமம் சொல்கிற அநேக காரியங்களை சொல்லவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஆண்டவருடைய வார்த்தையைக் குறித்து பேசுவதற்கு, அவர் செய்தார் செய்யவில்லை என்று சொல்வதற்கு நாம் யார்? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக இயேசு கிறிஸ்து சொன்ன அல்லது சொல்லாமலிருந்த காரியங்களின் ஆழங்களை அறிந்து கொள்ள இந்த காலத்தில்லுள்ள பண்டிதர்களால் எப்படி அறிந்து கொள்ள முடியும். அவரோடு கூட வசித்த, வாழ்ந்த, ஊழியம் செய்த சீஷர்களாலேயே அவரை அறிந்து கொள்ள முடியவில்லையே (யோ14:26). இயேசுகிறிஸ்துவின் உண்மையான அடையாளங்களுக்கடுத்த கேள்வி ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது? இயேசுகிறிஸ்து தெய்வமா? இல்லையா? என்பதை ஏன் முக்கியத்துவப்படுத்த வேண்டும்? ஏனென்றல் இயேசு கிறிஸ்து தெய்வமாக இல்லாமல் இருப்பாரேயானால், உலகத்தின் பாவத்திற்கான பரிகாரமாக அவரது இரத்தம் போதுமானதாக இருந்திருக்காது (1யோ2:2) தேவன் மாத்திரமே ஒரு நித்திய பரிகாரத்தை செய்ய முடியும். (ரோமர்5:8, 2கொரி5:21) இயேசு கிறிஸ்து கண்டிப்பாக நமது கடன்களை தீர்த்தே ஆக வேண்டியதிருந்தது. இயேசுகிறிஸ்து மரிக்கும்படியாகவே மனிதனாக வேண்டியதிருந்தது. இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதின் முலமாக மாத்திரமே வருகிறது. அவருடைய தெய்வத்தன்மை என்பது அவரே இரட்சிப்பிற்கு ஒரே வழி என்பதுவே ஆகும். ஆகவே இயேசுகிறிஸ்து 'நானே வழியும், சத்திமும் ஐPவனுமாயிருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன்" (யோ14:6) என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறது. அவரது தெய்வத்தன்மையை விளக்குவதற்கு போதுமானது ஆகும்.

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page