top of page

நான்கு ஆவிக்குரிய விதிகள் என்ன?


இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய இரட்சிப்பின் நற்செய்தியை பகிர்ந்துகொள்கிறதற்கான ஒரு வழியே நான்கு ஆவிக்குரிய பிரமாணங்கள் ஆகும். இது நற்செய்தியில் உள்ள முக்கியமான தகவலை நான்கு கருத்துக்களில் சொல்லும் எளிய ஒரு வழிமுறை ஆகும். நான்கு ஆவிக்குரிய விதிகளில் முதலாவது என்னவெனில், “தேவன் உன்னை நேசிக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்கு ஆச்சிரியமானதொரு திட்டம் வைத்திருக்கிறார்" என்பதாகும். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்று யோவான். 3:16 கூறுகிறது. “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்று இயேசு வந்த காரணத்தை யோவான்10:10 நமக்கு தருகிறது. தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிப்பது எது? ஒரு பரிபூரணமான வாழ்க்கையை நாம் பெறமுடியாதபடி தடுப்பது எது? நான்கு ஆவிக்குரிய விதிகளில் இரண்டாவது என்னவெனில், "பாவத்தினால் மனுக்குலம் கறைபட்டுவிட்டது. ஆகவே தேவனிடமிருந்து மனுக்குலம் பிரிக்கப் பட்டுவிட்டது. அதன் விளைவாக நாம் தேவன் நம் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது" என்பதே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 பாவத்தின் விளைவுகளைக் கூருகிறது. "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்" என்று கூறி ரோமர் 3:23 அதை உறுதிப்படுத்துகிறது. தேவன் தம்மோடு மனிதன் ஐக்கியப்படும் படி அவனை உண்டாக்கினார். மாறாக மனிதன் பாவத்தை உலகத்துக்கு கொண்டுவந்துவிட்டான். அதினால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டபின் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்த்த அந்த நல்ல உறவை நாம் பாழாக்கிக்கொண்டோம். இதற்கு தீர்வு என்ன? நான்கு ஆவிக்குரிய விதிகளில் மூன்றாவது என்னவெனில், " இயேசுகிறிஸ்து மாத்திரமே நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக தேவன் கொடுத்தது ஆகும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்" என்பதே. "நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்று ரோமர் 5:8 கூறுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு நாம் எதை அறிந்து, விசுவாசிக்கவேண்டுமென்று 1கொரிந்தியர்15:3-4 பின்வருமாறு தெரிவிக்கிறது:" கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்." யோவான்14:6 ல் "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று கூறி இயேசு இரட்சிப்புக்கு நானே வழியென்று தன்னைப் பற்றி பறைசாற்றினார். இந்த இரட்சிப்பு என்ற ஆச்சர்யமான பரிசை எப்படி நான் பெற்றுக்கொள்ளமுடியும்? நான்கு ஆவிக்குரிய விதிகளில் நான்காவது என்னவெனில், " இரட்சிப்பின் ஈவைப்பெற்றுக்கொள்வதற்கும், தேவன் நமக்காக வைத்திருக்கிற அந்த ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்வதற்கும் இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று அவர் மீது னம் விசுவாசத்தை வேண்டும்" என்பதே. "அவருடைய நாமத்தின் மீது விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுகொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று யோவான் 1:12 இதை குறிப்பிடுகிறது "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று அப்போஸ்தலர் 16:31 இதை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. நாம் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும்.(எபேசியர் 2:8,9) இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தை சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையே இரட்சிக்கும். இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page