top of page

நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?



நித்திய வாழ்விற்கான தெளிவான பாதையை வேதாகமம் நமக்கு காட்டுகிறது. முதலாவது, நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஏனெனில் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர். 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் செய்தோம், அது நம்மை தண்டனைக்கு உரியவர்களாக மாற்றுகிறது. நம் பாவங்கள் அனைத்தும் அநாதி தேவனுக்கு எதிரானவையாக இருக்கிற படியால், நித்திய தண்டனை மாத்திரமே சரியான தண்டனையாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23). நித்திய தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராக(1பேதுரு 2:22) இருந்த போதிலும், ஒரு மனிதனாகப் பிறந்து நமது தண்டனைக்கான கிரயத்தை செலுத்தும் படி மரித்தார். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). நமக்கு உரிய தண்டனையை தம்மீது ஏற்றுக் கொண்டு (2கொரிந்தியர் 5:21),இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (யோவான் 19:31- 42). மூன்றாம் நாட்களுக்குப் பின் அவர் மரித்தோரிலிருந்து எழும்பி(1கொரிந்தியர் 15:1-4) பாவத்தின் மேலும், மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். "அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்"(1பேதுரு 1:4). நாம் இரட்சிப்பைப் பெறும்படிக்கு, இயேசு யார், அவர் என்ன செய்தார், ஏன் செய்தார் என்பன போன்ற கிறிஸ்துவைக் குறித்த காரியங்களில் நாம் நம் சிந்தனையை விசுவாசத்தின் மூலமாக மாற்ற வேண்டும் (அப்போஸ்தலர் 3:19). நாம் நமது விசுவாசத்தை அவரில் வைத்து, நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்பதை நாம் நம்பினால், நாம் மன்னிப்பைப் பெற்று பரலோகத்தில் உள்ள நித்திய வாழ்வைக் குறித்த வாக்குத்தத்ததை பெறுவோம். "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார்" (யோவான் 3:16). " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "(ரோமர் 10:9). சிலுவை மீது கிறிஸ்து செய்துமுடித்தவற்றில் உள்ள விசுவாசம் மாத்திரமே நித்திய வாழ்வுக்கான ஒரே பாதை ஆகும். "கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9). நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"


Source: https://www.gotquestions.org/

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page