சபை என்றால் என்ன?
அநேக ஜனங்கள் இன்று சபை என்றால் ஒரு கட்டிடம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். வேதம் சபையைக் குறித்து போதிப்பது இது அல்ல. ‘சபை’ என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான ‘எக்ளிசியா’ விலிருந்து வருகிறது, அதற்கு ஒரு ‘‘கூடுகை’’ அல்லது ‘‘ அழைக்கப் பட்டவர்கள்’’ என்று அர்த்தமாம். சபை என்ற வார்த்தைக்கு அடித்தளத்தைப் பார்ப்போமனால் அது கட்டிடத்தையல்ல மக்களை குறிக்கிறது. நாம் ஜனங்களை எந்த சபைக்கு செல்கிறீர்கள் என்று கேட்கும்போது அவர்கள் ஒரு கட்டிடத்தை அடையாளங்காட்டுவது மிகவும் எதிரிடையான ஒன்று. ரோமர் I6:5 கூறுகிறது ‘‘ அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள்’’ இங்கு பவுல் அவர்களுடைய வீட்டிலுள்ள சபையைக் கூறுகிறார் - ஒரு கட்டிடத்தை அல்ல விசுவாசிகளாகிய சரீரத்தைக் கூறுகிறார். சபை என்பது கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது, அதற்கு அவரே தலையாயிருக்கிறார். எபேசியர்1:22-23 வரை இப்படியாக கூறுகிறது. ‘‘எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்’’. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்பது பெந்தகோஸ்தே நாளிலிருந்து கிறிஸ்துவின் வருகை வரைக்கும் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளால் உருவாகிறது. (அப்போஸ்தலர் நடபடிகள் 2) . கிறிஸ்துவின் சரீரம் இரண்டு நிலையாயிருக்கின்றது: 1. உலக முழுதளாவிய சபையில் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட யாவரும் அடங்குவார்கள். ‘‘ நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும் எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்’’ ( I கொரிந்தியர் 12:13). இந்த வசனம் விசுவாசிக்கிற எவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் பங்காகிறார்கள். கிறிஸ்துவின் ஆவியையும் சாட்சியாக பெறுகிறார்கள் என்று கூறுகின்றது. இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் உள்ளவர்களாய் இரட்சிப்பை பெற்ற யாவரும் இந்த உலகளாவிய தேவனுடைய சபை. 2. உள்ளுர் சபை என்பதை கலாத்தியர் 1:1-2 - இல் பவுல் ‘..... பவுலாகிய நானும், என்னுடனே கூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதகிறதாவது’’ இங்கு கலாத்தியர் அநேக சபைகள் இருந்ததைப் பார்க்கிறோம். இவைகளை உள்ளுர் சபைகள் என்று அழைக்கலாம். பாப்டிஸ்டு சபை, லுத்ரன் சபை, கத்தோலிக்க சபை போன்றவை உலகலாவிய சபையைப் போல சபை கிடையாது. ஆனால் உள்ளுர் சபை, உள்ளுர் சரீரமாகிய விசுவாசிகள். உலகளாவிய சபை என்பது கிறிஸ்துவுக்குட்பட்டு அவரை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்கள். இவர்கள் உள்ளுர் சபையில் ஐக்கிங்கொண்டு பக்திவிருத்தியடைய வேண்டும். சுருக்கமாக, சபை என்பது ஒரு கட்டிடமோ அல்லது பிரிவோ கிடையாது. வேதாகமத்தின்படி சபை என்பது கிறிஸ்துவின் சரீரம்- இரட்சிப்புக்காக இயேசுகிறிஸ்துவின்மீது நம்பிக்கை வைத்தவர்கள் யாவரும் (யோவான் 3:16, 1கொரிந்தியர் 12:13). உள்ளுர் சபைகள் என்பது உலகளாவிய சபையின் உறுபினர்களின் கூடுகை. உள்ளுர் சபையில் தான் உலகளாவிய சபையின் உறுப்பினர்கள் ‘சரீரம்’ என்று I கொரிந்தியர் 12 –வது அதிகாரத்தில் கூறப்பட்டபடி உற்சாகப்படுத்தவும் போதிக்கவும் மற்றும் ஒருவரையொருவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய அறிவிலும் கிருபையிலும் கட்டியெழுப்பவும் முடியும்.